வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட களுத்துறை பிரதேசம் தொடர்பான விசேட மீளாய்வு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விஷேட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  இந்த மீளாய்வுக் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை

යුරෝපානු සංගමයේ ප්‍රධානීත්වය වෙනුවෙන් ප්‍රථම වරට කාන්තාවක්