வகைப்படுத்தப்படாத

வெலிஓயா – வட்டவளை பாதை காபட் கலவையால் செப்பனிடும் பணிகள் விரைவில் நிறைவு

(UDHAYAM, COLOMBO) – வெலிஓயா – வட்டவளை பாதை காபட் கலவையால் செப்பனிடும் பணிகள் விரைவில் நிறைவு

அட்டன் வெலிஓயா  ஆகரஓயா வழியாக வட்டவளைக்குச் செல்லும் பாதை காபட் பாதையாக புனரமைக்கும் பணிகள் முடிவுறும் நிலையிலுள்ளது.

ஐ ரோட் திட்டத்தின் கீழ்  ஒன்பதரை கிலோ மீற்றர் தூரமுள்ள வெலிஓயா – வட்டவளை பாதை

காபட் பாதையாக செப்பனிடப்பட்டுள்ளதால் செனன் கே . எம் , மாணிக்கவத்தை , வெலிஓயா , ஆகரஓயா , அகவத்தை , லொனெக் பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்களான பழனி திகாம்பரம் , வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி இந்தப்பாதைப் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இந்தப்பாதை புனரமைப்புப் பணிகளை மத்திய மாகாணசபை உறுப்பினர் பார்வையிட்டார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

சட்டத்தை அமுல்ப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது

டிரான் அலசிற்கு கடல்கடந்த சொத்துக்கள்- புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு.