வகைப்படுத்தப்படாத

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தற்காலிக பொருளாதார வாய்ப்பே – மஹிந்த

(UDHAYAM, COLOMBO) – தற்காலிமான பொருளாதார வாய்பாகவே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் கட்டி எழுப்ப முடியும் என அரசாங்கம் மக்கள் மத்தியில் கருத்தொன்றை பரப்பியுள்ளது.

இலங்கையின் தனிநபர் வருமானம் 4 ஆயிரத்து 35 டொலர்களை அண்மித்துள்ள நிலையில், இலங்கையின் இறக்குமதி பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் இறக்குமதி செய்கின்ற போது முழுமையான வரி அறவீட்டுக்கு முகம் கொடுக்க

வேண்டிய சூழ்நிலை விரைவில் உருவாகும் என மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜீ.எஸ்பி ஜீ.எஸ்.பி வரிச்சலுகையில் பொதுவாக ஏற்று கொள்ளப்பட்ட முறைமையினை இலங்கை பின்பற்றும் பச்சத்தில் வரி அதிகரிகப்படும் போது அதற்கு ஏற்றால் போல் தம்மை திருத்தியமைத்து கொள்வது இலங்கைக்கு இலகுவானதாக இருக்கும்.

அவ்வாறன்றி அரசாங்கம் பின்பற்றி வரும் முழுமையான ஜீ.எஸ்.பி பிளஸ் வரிசலுகை தொடர்பான தற்போதைய நடைமுறையினால் வரி அதிகரிக்கப்படும் போது இலங்கை சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நூறு வயதை தாண்டிய முதியோர் தொடர்பில் அறிவிக்கவும்

Premier to testify before PSC on Aug. 06

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தடை…