வகைப்படுத்தப்படாத

நோயாளா் காவு வண்டி விபத்து கிளிநொச்சி சாரதி பலி

(UDHAYAM, COLOMBO) கிளிநொச்சியிலிருந்து நோயளர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டி நீர்கொழும்பில் விபத்துக்குள்ளாகியதில் சாரதி பலியாகியுள்ளாா்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் நோயாளர்கள் மற்றும் மருத்துவா் ஒருவருடனும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளா் காவு வண்டி நீர் கொழும்பு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது உள் வீதியில் இருந்து பிரதான வீதியை நோக்கி வந்த காா் ஒன்று நோயாளா் காவு வண்டி மீது மோதியதன் காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் போது நோயாளர் காவு வண்டியின் சாரதி கிளிநொச்சியை சேர்ந்த யோகரத்தினம் தயேந்திரன்(பபா) வயது 47 என்பவரே பலியாகியுள்ளாா். மருத்துவா் அதிர்ச்சிக்குள்ளான நிலையிலும் ஏனைய நோயாளா்களும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

எஸ்.என்.நிபோஜன்

Related posts

කොළඹ ප්‍රදේශ කිහිපයකට අද අඩු පීඩනයෙන් ජලය

Boris Johnson’s new-look cabinet meets for first time

தைவான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி