வகைப்படுத்தப்படாத

பொசன் அன்னதான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – பொலன்னறுவை புலத்திசி பொசன் உதானய செயற்திட்டத்துடன் இணைந்ததாக பொலன்னறுவை பொது மருத்துவமனையில் நடைபெற்ற பக்தி இசை நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர வளாகத்தில் இரு நாட்களாக நடைபெற்ற பண்டாரநாயக்க – சேனாநாயக்க பொசன் அன்னதானத்திலும் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி கலந்துகொண்டதுடன், பலபிரதேசங்களிலிருந்து வருகை தந்த ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு ஜனாதிபதி அன்னதானம் வழங்குவதிலும் பங்குபற்றினார்.

பொலன்னறுவை பௌத்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதியின் ஆலோசனையின்படி பொலன்னறுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் இந்த அன்னதான நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிக்கு பூட்டு

Navy nabs 2 persons with heroin

தெரனியாகலையில் 7 வயது சிறுமியும், 45 வயதான நபரும் படுகொலை