வணிகம்

சீனி உப்புக்கான வரிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்

(UDHAYAM, COLOMBO) – சீனி இறக்குமதிக்கான வரி அதிகரிப்படுவது அல்லது சீனிப் பயன்பாடு குறைக்கப்படுவது சிறந்ததாகும் என்று  சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு  இது உதவுகிறது.

சீனிக்கான இறக்குமதி வரி பத்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிக்கப்பட வேண்டுமென்பது 2015 ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொற்றா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனிஇ உப்பு என்பன அதிகளவில் காணப்படும் உணவுப் பொருட்களுக்கான வரி மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்றும் சுகாதார போஸாக்கு மற்றும் சுதேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!

2018 வரவு செலவுத்திட்டம் – ஆரோக்கியமான செயலாற்று திறன் கொண்டது

AG GLASS வடிவமைப்பு உடன் கூடிய மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் முன்னணி EYE AUTOFOCUS அம்சத்துடன் சந்தைக்கு வரவுள்ள VIVO V20