வகைப்படுத்தப்படாத

7 லட்சத்து 25 ஆயிரத்து 944 வழக்குகள் விசாரிக்கப்படாதுள்ளது

(UDHAYAM, COLOMBO) – கடந்த 2016 ஆம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை, 7 லட்சத்து 25 ஆயிரத்து 944 வழக்குகள் விசாரிக்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயர்நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 566 வழக்குகளும்,  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 837 வழக்குகளும விசாரிக்கப்படாது தேங்கியுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

குடியியல் மேல்நீதிமன்றங்களில் 3 ஆயிரத்து 758 வழக்குகளும், மேல் நீதிமன்றங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 749 வழக்குகளும் நீதவான் நீதிமன்றங்களில் 5 ஆயிரத்து 973 வழக்குகளும் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ; 4 மாணவர்கள் மருத்துவமனையில்

නව කර්මාන්තශාලා සඳහා පරිසර ආරක්ෂණ බලපත්‍රය අනිවාර්යයි

රත්ගම ව්‍යාපාරිකයින්ගේ ඝාතනයට සම්බන්ධය සැකරුවන් 17 දෙනා යලි රිමාන්ඩ්