வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிவாரணப் பொதி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில  தினங்களால் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த நிவாரணப்பொதியில் அடங்கியிருப்பதாக கல்வி அமைச்ச தெரிவித்துள்ளது.

எட்டு மாவட்டங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்த நிவாரண வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் குறித்து சரியான தகவல்கள் அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும்.

சரியான தகவல்களை உறுதி செய்த பின்னரே நிவாரணப் பொதி வழங்கப்படும்.

தேசிய பாடசாலைகள் மற்றும் பல வர்த்தக நிறுவனங்கள் திரட்டிய பொருட்கள் கல்வி அமைச்சிடம் வழங்கும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.

இதற்காக பங்களிப்புச் செய்த அனைவருக்கும்  அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதன் போது நன்றி தெரிவித்தார்.

Related posts

சுஷ்மா , ரவி சந்திப்பு

2018 சர்வதேச நுகர்வோர் உரிமை தினம் இன்று

Former Defence Sec. and IGP granted bail