வகைப்படுத்தப்படாத

சற்றுமுன் ஆரம்பமானது வடமாகாண ஊடப்பயிற்சி

(UDHAYAM, COLOMBO) – தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட வடமாகாண ஊடக பயிற்சி  வேலைத்திட்டம் கிளிநொச்சி மகாதேவா  ஆச்சிரமத்தின் பொது  மண்டபத்தில் சற்றுமுன் ஆரம்பமானது

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உத்தியோகத்தரும் தமிழ் அறிவிப்பாளருமான  சிவராசா  அவர்களின் தலமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமானது

இவ் வேலைத்திட்டமானது  தொடர்ந்து நாளை மாலை வரை நடைபெற உள்ளதுடன்  வேலைத்திட்டத்தில் பிரதம விருந்தினராக  கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் திருலோகமூர்த்தியும்  வளவாளர்களாக  அறிவிப்பளர்களான ஏ.எம் .ஜெசீம்  மற்றும் நசீர் அஹமட ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்

இன் நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு , யாழ்ப்பாண  இளம் ஊடகவியலாளர்கள் இளைஞர்கள் ,யுவதிகள்  எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்

எஸ்.என் .நிபோஜன்

Related posts

Motion to abolish death penalty tabled in Parliament

இஸ்ரேல் பிரதமர் மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு

டமஸ்கஸ்சில் குண்டு வெடிப்பு ; 35 பேர் பலி