வகைப்படுத்தப்படாத

கலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – கலைஞர்களுக்கான உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.

இதுதொடர்பாக உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திலிருந்தே இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

Plane crash at Texas Airport kills 10

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய கிலுயுயே எரிமலை

பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை