வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்ட்சோர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடன்களில் இருந்து தங்களை விடுவிக்க வலியுறுத்தி, விவசாயிகளால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது அங்கு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி

இஷா அம்பானியின் திருமணம்

Former DIG Dharmasiri released on bail