வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, தொடர் இலக்கம் அழிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
