அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையில் வர்த்தகப் போர் இருந்து வருகிறது.
இந்நிலையில், சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந் நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்துக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்தமைக்கு பதிலடியாகவே இந்த வரி விதிப்பு எனவும் அனைத்து கனடா விமானங்களுக்கும் சான்றிதழை அமெரிக்கா இரத்து செய்யும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
