அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சிங்கப்பூர் ஹூண்டாய் மோட்டார் குழும புத்தாக்க மையத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம்

கோவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்தத்தைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டில் செயற்பாடுகளை ஆரம்பித்த, பல பில்லியன் டொலர் முதலீட்டு திட்டமான சிங்கப்பூரின் முதலாவது ரோபாட்டிக்ஸ் ஸ்மார்ட் தொழிற்சாலையான சிங்கப்பூர் ஹூண்டாய் மோட்டார் குழும புத்தாக்க மையத்திற்கு (Hyundai Motor Group Innovation Center Singapore – HMGICS) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) விஜயம் செய்தார். தற்சமயம் சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருக்கும் ஆய்வுச் சுற்றுப்பயணத்திற்கு மத்தியிலேயே இவ்விஜயமும் இடம்பெற்றது.

அதிநவீன வசதிகள் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அபிவிருத்தி மையமான இங்கு, மின்சார வாகன உற்பத்தி வசதிகள், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் உயர் பயன்பாடுகள் EV உற்பத்திகளுக்கு மட்டுமல்லாமல் SMART (ஸ்மார்ட்) விவசாயம் மற்றும் நிலையான தொழிற்றுறை தீர்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ஹூண்டாய் மோட்டார் குழுமம் மிகவும் இயக்கு திறன் கொண்டு, நிலையான மற்றும் மனித மைய உற்பத்திச் சூழல் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிநவீன ரோபோ தொழில்நுட்பம், தானியங்கு மற்றும் தரவு அடிப்படையிலான கட்டமைப்பு வடிவங்களை ஒருங்கிணைத்திருக்கும் விதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விஜயத்தின் போது, கண்காணித்தார்.

நிலைத்தன்மை, புதுமைத்திறன் மற்றும் SMART கட்டமைப்புகளை மையமாகக் கொண்ட எதிர்கால வாழ்க்கைப் போக்குகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதம் என்பதற்கான நவீன நிஜ கற்பித எடுத்துக்காட்டாக இந்த மையம் இயங்கி வருகின்றது.

இதன் பிரகாரம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த முன்முயற்சியை ஒரு அபூர்வ முயற்சியாக விவரித்ததோடு, “SMART Sri Lanka” தொடர்பான தனது தொலைநோக்கிற்கு அமைவாக, இத்தகைய முன்னோக்குமிக்க முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மாதிரிகளை இலங்கையிலும் நடைமுறையில் இயங்கு நிலைப்பட்டு ஊக்குவித்து வழிவகுக்க வேண்டும் என்று இங்கு சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தை எதிர்கொள்வதற்குத் தயாராகும் வகையிலான கொள்கைகள் மற்றும் நீண்டகால தேசிய அபிவிருத்தி மூலோபாயம் என்பவற்றை உருவாக்குவதற்கு இத்தகைய உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு இலங்கை பிரவேசிப்பது அவசியம் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில் புத்தாக்கம் முன்னிலையான அமைவுச் சூழல் கட்டமைப்பின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் ஈடுகொடுக்கும் இயலுமை என்பவற்றை வழிநடத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் ஆராயும் வகையில் விடயங்களைக் கண்டறியும் பணியின் ஒரு பகுதியாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விஜயத்தை மேற்கொண்டார்.

Related posts

தந்தையோடு சேர்ந்து திட்டம் தீட்டி கணவனை வெட்டி படுகொலை செய்த மனைவி

ஜனாதிபதி ரணில் பொய் சொல்கிறார்

ஹக்கீம், மனோவுக்கு SJBயில் புதிய பதவி வழங்கிய சஜித்!