அரசியல்உள்நாடு

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (29) இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான நாமல் ராஜபக்ச உட்பட நான்கு சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, இந்தச் சம்பவம் தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது முறைகேடாக ஈட்டிய பணத்தை, நிறுவனம் ஒன்றைப் பராமரிப்பதன் ஊடாக பணமோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

மட்டக்களப்பு உணவகத்தில் பாரிய தீ விபத்து – தெய்வாதீனமாக உயிர் தப்பிய பணியாளர்கள்

editor

இலஞ்ச வழக்கில் இருந்து குமார வெல்கம விடுவிப்பு

ஜனாதிபதி அநுர மறந்து போன வாக்குறுதிகளை நினைவு படுத்துவோம் – அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவது எமது நோக்கமல்ல – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor