உள்நாடுபிராந்தியம்

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுனாமிவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (27) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த விபரங்கள் வருமாறு:

அம்பலாங்கொடை, சுனாமிவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின் போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் அங்கிருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த நபர், சிகிச்சைகளுக்காகப் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கலபொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இக்குற்றச்செயலுக்கு ‘பிஸ்டல்’ வகையைச் சேர்ந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நீரில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு – இலங்கையில் சோகம்

editor

PUCSL தலைவரை பதவி நீக்கம் செய்வதுடன் தொடர்புடைய குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது- கஞ்சன

நீதிமன்ற நடவடிக்கைகள் ஐந்து நாட்களுக்கு மட்டு