அம்பலாங்கொடை நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் காசாளர் ஒருவரை அக்மீமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நவீன துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பலாங்கொடை, கெரமினியவில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த துப்பாக்கியும் அதற்குப் பயன்படுத்தப்படும் தோட்டாவும் கைப்பற்றப்பட்டன.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி 12 சென்டிமீட்டர் நீளமும், தோட்டா சுமார் ஒன்றரை சென்டிமீட்டர் நீளமும் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் காசாளராகப் பணிபுரிந்த 32 வயதுடைய சந்தேக நபர், இந்த துப்பாக்கியை 30,000 ரூபாவுக்கு விற்க முயன்றபோதே அதைக் கைப்பற்றியுள்ளார்.
