உள்நாடு

நுவரெலியாவில் உறைபனி பொழிவு – இன்றும் ஆகக் குறைந்த வெப்பநிலை

இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இன்று அதிகாலை பண்டாரவளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 பாகை செல்சியஸும், பதுளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.8 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மஹாஇலுப்பள்ளம பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸ் ஆகும்.

இதவேளை பல இடங்களில் உறைபனி பொழிவு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பலத்த பாதுகாப்புடன் இறுதி அஞ்சலி செலுத்திய கோட்டாபய!

பிரச்சார பணிகளுக்கு சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

editor