உள்நாடு

ஜிந்துபிட்டிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – மேலும் ஒருவர் கைது

ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு இரண்டு பிள்ளைகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (22) 95 வத்த பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குற்றத்துக்கு உதவியதற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, ​​அவரிடம் இருந்து 24 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 இல் வசிக்கும் 24 வயது இளைஞர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் இன்று (23) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சமன் பெரேராவுக்கு விளக்கமறியல்

பேருவளையில் விருந்துபசாரத்தை நடத்திய 18 பேர் க‍ைது

வழங்குவதாக கூறிய உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை ? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

editor