இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று (19) காலை 11.51 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நில நடுக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது, இதுவரை எந்த சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இருப்பினும், அப்பகுதியில் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதால், விழிப்புடன் இருக்குமாறு இந்திய தேசிய நில அதிர்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
