உள்நாடுபிராந்தியம்

லொறியும் வேனும் மோதி கோர விபத்து – இருவர் படுகாயம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று (17) பிற்பகல் லொறியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற லொறி, பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முற்பட்டபோதே, டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளன.

லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-செ.திவாகரன்

Related posts

இன்றும் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா

ஞானசார தேரருக்கு பிடியாணை