உள்நாடு

இன்று மாலை வெளுத்து வாங்கப்போகும் மழை

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் இன்று பிற்பகல் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சிஐடி க்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இன்று அதிகாலை பொரலஸ்கமுவயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – ஒருவர் காயம்

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது – சஜித் பிரேமதாச

editor