உள்நாடுவணிகம்

Earthfoam தனியார் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் முதன்மையான ஐந்து விருதுகளை வென்று சாதனை

இயற்கை இறப்பர் அடிப்படையிலான மெத்தைகள், டொப்பர் மற்றும் தலையணைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான Earthfoam தனியார் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் முதன்மையான ஐந்து விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

இயற்கை இறப்பர் உற்பத்தித் துறையின் முன்னோடி என்ற வகையில் பெறுமதி சேர்த்தல், கமத்தொழில் புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் ஏற்றுமதி செயலாற்றுகை ஆகிய துறைகளில் அந் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பறைசாற்றும் வகையில் அந்நிறுவனம் மேற்படி விருதுகளை வென்றுள்ளது.

இலங்கை ப்ளாஸ்ரிக் மற்றும் இறப்பர் கற்கை நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளராக Earthfoam நிறுவனத்தை தெரிவு செய்துள்ளமை தனித்துவமானதொரு மைல்கல்லாகும்.

கடந்த காலங்களில் சர்வதேச சந்தை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்திக் கொண்டு மேலான ஏற்றுமதி இலக்குகளை அடைந்துள்ளமையே அதற்கு காரணமாகும்.

இலங்கை வர்த்தகச் சபை ஏற்பாடு செய்திருந்த விருது விழாவில் கமத்தொழில், கால்நடை மற்றும் கடற்றொழில் ஆகிய துறைகளின் பாரியளவிலான பிரிவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அந்நிறுவனம் சர்வதேச சந்தைக்கு இயற்கை இறப்பரை அடிப்படையாக கொண்ட போட்டி உற்பத்திகளை வழங்குகின்றமைக்காக ஆண்டின் சிறந்த பெறுமதி சேர் உற்பத்தி நிறுவனத்துக்கான விருதையும் வென்றுள்ளது.

சூழல் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் மேற்படி நிறுவனம் ப்ளாஸ்ரிக் மற்றும் இறப்பர் கற்கை நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது விழாவில் நிலைபேறான தன்மை மற்றும் சூழல் பொறுப்புகள் பிரிவின் மூன்றாம் இடத்தை வென்றுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கு பங்களிப்பு வழங்கியமைக்காக 27 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் மேற்படி நிறுவனத்துக்கு உலர்த்தப்பட்ட இறப்பர் உற்பத்திப் பிரிவின் திறமைச் சான்றிதழ் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய சந்தர்ப்பமொன்றில் ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதையும் இந் நிறுவனம் வென்றுள்ளது.

2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Earthfoam நிறுவனம் ஐக்கிய அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 100% இயற்கை மற்றும் கரிம (Organic) இறப்பரை பயன்படுத்தி உற்பத்திச் செய்யப்படுகின்ற மெத்தைகள், டொப்பர் மற்றும் தலையணைகளை ஏற்றுமதி செய்கின்றது.

சுமார் 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் இறப்பர் உற்பத்தி செய்யும் 1200 இற்கும் மேற்பட்ட விவசாயிகளை கொண்ட இலங்கையின் விசாலமான GOLS சான்றிதழை வென்ற இயற்கை இறப்பர் வலையமைப்பிடமிருந்து தேவையான இறப்பர் மேற்படி நிறுவனத்துக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

400 பணியாளர்களை கொண்ட Earthfoam தனியார் நிறுவனம் இறப்பர் உற்பத்தித் துறைக்கான உலகின் முதலாவது Fair for Life சான்றிதழை வென்ற நியாய விற்பனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் கீழ் அந் நிறுவனம் காப்புறுதி, கல்வி உதவிகள், வலுவூட்டல் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக அபிவிருத்தி திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளினதும் இறப்பர் பால் தொழிலாளர்களினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு 50 மில்லியன் ரூபாயுக்கும் மேல் முதலீடு செய்துள்ளது.

ஹொரணையில் அமைந்துள்ள அதி நவீன கைத்தொழிற்சாலையை கொண்டுள்ள அந் நிறுவனம் அங்கு உற்பத்திச் செய்யப்படும் சகல உற்பத்திகளும் செயற்கை இறப்பர் பால் மற்றும் நிரப்பிகளற்ற பாதுகாப்பானதும் நீண்ட காலம் பாவிக்கக் கூடியதுமான உற்பத்திகள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமது கொள்ளளவை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் ஒரு சில புதிய உற்பத்திகளை தமது உற்பத்தித் தொகுப்புகளில் சேர்ப்பதற்கும் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

Related posts

விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

editor

ஜனாதிபதி அநுரவிற்கும் இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

editor

பலஸ்தீனத் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்குமிடையில் சந்திப்பு

editor