உள்நாடுபிராந்தியம்

திருகோணமலையில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

திருகோணமலை வைத்தியசாலையில் இன்று (13) வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவு இயங்கவில்லை.

இதனால் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

கிழக்கு மாகாண ரீதியாக இன்று (13) வைத்தியர்கள் மேற்கொள்ளும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவு இயங்கவில்லை. இதனால் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனினும் அவசர சேவைப்பிரிவு, களங்கள் மற்றும் பெரும்பாலான கிளினிக் என்பன வழமைபோல் இயங்கியது.

அக்கரைப்பற்று பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றம் செய்யக்கோரி அவ் வைத்தியசாலையின் வைத்தியர்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலை வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்றையதினம் (13) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்

Related posts

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது

மது போதையில் அரச பேருந்தை செலுத்திய சாரதி கைது

editor