உள்நாடு

வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்த கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் வைத்தியர்கள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் சேர்ந்த வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வைத்தியர் ஜனித் பேதுருஆரச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு

சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

தங்காலையில் ஐஸ் போதைப்பொருள் – லொறியின் உரிமையாளருக்கு தடுப்பு காவல் உத்தரவு

editor