தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) இரவு 10.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது.
இது நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய நாளை (10) வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
