தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதேபோல், மண்சரிவு எச்சரிக்கை இரண்டாம் கட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை நிலவுவதால் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படக்கூடும் என்றும், அவ்வாறான அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக அந்த இடங்களிலிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர இது குறித்துக் கூறுகையில்:
“மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்காக ‘அனர்த்த அவசரப் பை’ ஒன்றைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு மக்களை அறிவுறுத்துகிறோம்.
அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள், பிள்ளைகளின் கல்விச் சான்றிதழ்கள் போன்ற மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் கொண்டு செல்லக்கூடிய அளவிலான அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய பையை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.” என்றார்.
