உள்நாடு

இஷார செவ்வந்தி தொடர்பான கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியை முக பரிசோதனைக்காக தடயவியல் மருத்துவ அதிகாரியிடம் அனுப்ப உத்தரவிடுமாறு கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கொழும்பு தலைமை நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், கோரிக்கையை நிராகரித்த நீதவான், இஷாரா செவ்வந்தி இன்னும் காவலில் இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத சந்தேக நபர் குறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று கூறினார்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (07) கொழும்பு குற்றவியல் நீதிமன்றம் ஆஜர்பட்டனர்.

இதன்போது, இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நந்தகுமார தக்ஸி மற்றும் அஜித் குமார ஆகிய சந்தேக நபர்களை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.

சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சந்தேக நபர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்

Related posts

கொழும்பு மாதம்பிட்டியில் தீ

மத்திய மாகாண ஆளுநருடன் – ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்.

முறையற்ற சொத்துக் குவிப்பு – CID இல் முன்னிலையாகுமாறு யோஷிதவுக்கு அழைப்பு

editor