உள்நாடுபிராந்தியம்

கணவனின் தாக்குதலில் மனைவி பலி

அகலவத்தை, தெல்பாவத்த பகுதியில் நேற்று (01) காலை கணவனின் தாக்குதலில் அவரது மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தெல்பாவத்த, மககம பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் என குறிப்பிடப்படுகின்றது.

குடும்பத் தகராறு காரணமாக, கணவர் கதவு தாழ்ப்பாளால் தாக்கியதில் இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உயிரிழந்த வயேதிப பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பாக 84 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஹட்டன் பேருந்து விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

editor

அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது – ஜனாதிபதி அநுர

editor

தமிழகம் நோக்கி புறப்பட்டார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

editor