உள்நாடு

போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது

போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலித் தங்க ஆபரணங்களைத் தயாரித்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் நீர்கொழும்பு பிரிவு அதிகாரிகளினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்ட கொலன்னாவ மற்றும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய சந்தேகநபர் ஹையந்துடுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நீர்கொழும்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

உப்பு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

editor

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று