உள்நாடுபிராந்தியம்

குரங்கின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய குழந்தை

குரங்கின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக நான்கு மாத குழந்தையொன்று உயிர் பிழைத்த சம்பவம் இன்று (31) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவில் கிவுலகட, கலபிந்துனாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இன்றை தினம் குழந்தையின் தாய் குழந்தைக்கு பாலூட்டி விட்டு வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த சமயம் வீட்டுக்கூரையூடாக வீட்டுக்குள் நுழைந்த குரங்கு நுளம்பு வலையால் மூடப்பட்டு படுக்கையிலிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு முன் வாசல் வழியாக வெளியில் செல்ல முற்பட்ட போது குழந்தையின் தாய் கூக்குரலிட்டமையினால் குழந்தையை கீழே போட்டு விட்டு குரங்கு தப்பிச்சென்றுள்ளது.

இதன் காரணமாக குழந்தையின் தலையின் பின் பகுதியில் அடிபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியரின் அனுமதியுடன் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

குரங்கு குழந்தையை தூக்கிச்செல்ல எடுத்த முயற்சி தடுக்கப்பட்டதுடன், தெய்வாதீனமாக குழந்தைக்கு எந்தவித பாரிய உயிராபத்தோ கீறல்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்.

Related posts

பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் – ரிஷாத் இடையே சந்திப்பு

பசில் – ஆட்டிகல நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்

மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம்