உள்நாடு

போனஸ் கொடுப்பனவை கோரி விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரமவினால் அறிவிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவாக, 05 மாத அடிப்படைச் சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று (29) போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த போராட்டத்தில் விமான நிலைய ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம், பொதுஜன ஊழியர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

விமான நிலைய நிறுவனத்தின் வருடாந்த தேறிய லாபம் 21 பில்லியன் ரூபாயாக உள்ள பின்னணியில், தற்போது 2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவாக இரண்டு மாத அடிப்படைச் சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் முஹந்திரம் இதன்போது தெரிவித்தார்.

இதற்கமைய, இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து குறைந்தபட்சம் மேலும் இரண்டு மாத அடிப்படைச் சம்பளத்தையாவது போனஸாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப்பேரணி நாளை

editor

சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு விசேட அறிவிப்பு

editor

பாரிய விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றிய பஸ் சாரதி – குவியும் பாராட்டுக்கள்

editor