கெகிராவ – தலாவ வீதியின் கிரலோகம பகுதியில், தலாவையிலிருந்து எப்பாவல நோக்கி பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த சாரதி, ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் காயமடைந்து தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, குறித்த ஆண் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
