உள்நாடுபிராந்தியம்

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த 17 வயதுடைய யுவதி மாயம்

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் (Gin Oya) குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

சம்பவம் குறித்து நேற்று (28) வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன யுவதி போருதோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யுவதி தான் காதலித்த இளைஞனை தொலைபேசி ஊடாக அந்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அந்த இளைஞன் தனது நண்பர் ஒருவருடன் நைனாமடை பாலத்திற்கு அருகில் வந்தபோது, யுவதி ஆற்றில் குதித்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதியைக் காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனும் ஆற்றில் குதித்துள்ளார்.

எனினும், அங்கிருந்தவர்கள் இளைஞனைப் பத்திரமாக மீட்ட போதிலும், யுவதி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் குறித்து வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

editor

பாகிஸ்தான் கடற்படை பிரதம அதிகாரி – பிரதமர் இடையே சந்திப்பு