உள்நாடுபிராந்தியம்

பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (29.12.2025) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சுகாதார தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையிலீடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில நீதிமன்ற உத்தரவைப் பெற்று மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் ஸோபிதன் சதானந்தம்

Related posts

சாதாரண தர பரீட்சையில் மாணவர்களின் முறைகேடு – விசரணைகள் ஆரம்பம்

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது

இஸ்லாமிய தினப் போட்டி: பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி சாம்பியனாக தெரிவு