ஹொரணை வவுலகல பிரதேசத்திலுள்ள றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (29) காலை தீ பரவியுள்ளது.
இந்நிலையில், ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், பிரதேசவாசிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
