உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை, வீரநகர் பகுதியில் கடலரிப்பு – வீடுகளுக்கு சேதம்

திருகோணமலை -வீரநகர் பகுதியில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் தாழ் இறங்கியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது.

திருகோணமலை மட்டுமல்லாமல் கிண்ணியா, மூதூர், அலஸ்தோட்டம் போன்ற பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கற்பாறைகள் இடப்படாமையினால், கடல் கொந்தளிப்பு காரணமாக வீடுகளுக்குள் நீர் உட்பகுந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கடல் அரிப்பை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-அப்துல்சலாம் யாசீம்

Related posts

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

பிரதமர் இந்தியா விஜயம்

வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன் கருவி