2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன.
புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் ஏற்கனவே வௌிவந்துள்ளன.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களமும் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 26 அரசாங்க விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியாக தலா 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன.
2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மலரவுள்ளது.
அத்துடன், வெசாக் பௌர்ணமி தினம் மே 01 ஆம் திகதியும், நத்தார் டிசம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் இடம்பெற்றுள்ளன.
2026 ஆம் ஆண்டின் அரச விடுமுறைகள்,
ஜனவரி – 03 சனிக்கிழமை – துருத்து முழுநோன்மதி தினம்
ஜனவரி – 15 வியாழக்கிழமை – தைப்பொங்கல் பண்டிகை
பெப்ரவரி – 01 ஞாயிற்றுக்கிழமை – நவம் முழு நோன்மதி தினம்
பெப்ரவரி – 04 புதன்கிழமை – சுதந்திர தினம்
பெப்ரவரி – 15 ஞாயிற்றுக்கிழமை – மகா சிவராத்திரி விரதம்
மார்ச் – 02 திங்கட்கிழமை – மெதின் முழுநோன்மதி தினம்
மார்ச் – 21 சனிக்கிழமை – ரமழான் பண்டிகை
ஏப்ரல் – 01 புதன்கிழமை – பஃக் முழுநோன்மதி தினம்
ஏப்ரல் – 03 வெள்ளிக்கிழமை – பெரிய வெள்ளி தினம்
ஏப்ரல் – 13 திங்கட்கிழமை – சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம்
ஏப்ரல் – 14 செவ்வாய்க்கிழமை – சிங்கள, தமிழ் புத்தாண்டு
மே – 01 வெள்ளிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினம்
மே – 01 வெள்ளிக்கிழமை – உலக தொழிலாளர் தினம்
மே – 02 சனிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த தினம்
மே 28 வியாழக்கிழமை – ஹஜ் பெருநாள்
மே 30 சனிக்கிழமை – அதி பொசன் முழு நோன்மதி தினம்
ஜூன் – 29 திங்கட்கிழமை – பொசொன் முழுநோன்மதி தினம்
ஜூலை – 29 புதன்கிழமை – எசல முழுநோன்மதி தினம்
ஒகஸ்ட் – 26 புதன்கிழமை – மீலாதுன் நபி (நபிகள் நாயகத்தின் பிறந்த தினம்)
ஒகஸ்ட் 27 வியாழக்கிழமை – நிக்கினி முழுநோன்மதி தினம்
செப்டம்பர் 26 சனிக்கிழமை – பினர முழுநோன்மதி தினம்
ஒக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை – வஃப் முழுநோன்மதி தினம்
நவம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை – தீபாவளிப் பண்டிகை
நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை – இல்புர முழுநோன்மதி தினம்
டிசம்பர் 23 புதன்கிழமை – உந்துவப் முழுநோன்மதி தினம்
டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை – நத்தார் பண்டிகை
