முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கொழும்பின் மிரிஹான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, சமல் ராஜபக்க்ஷ மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வந்துள்ளார்.
ஜனாதிபதிகளின் வசதிகளை நீக்குத் சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷ செப்டம்பர் 11 ஆம் திகதி கொழும்பு விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்பினார்.
