அங்கொடை IDH பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
04 மாடிகளைக் கொண்ட இந்த வர்த்தக நிலையத்திலேயே தீ பரவியுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கோட்டே தீயணைப்புப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
