உள்நாடு

அம்பலாங்கொடை பிரதேசத்தில் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் – ஆயுதங்களுடன் 6 பேர் கைது

கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, இவர்களில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினராலும், ஏனைய நால்வர் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவோல்வர் ஆகிய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த புதிய இராணுவத் தளபதி

editor

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் FIASTA 25 விருது வழங்கும் நிகழ்வு!

editor