மஸ்கெலியா பொலிஸாரினால் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கைது நடவடிக்கை கடந்த நேற்று (24) மாலை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மஸ்கெலியா மற்றும் சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் நீண்டகாலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சதீஸ்குமார்
