வகைப்படுத்தப்படாத

ஹட்டன் சமனலகமவில் மண்சரிவு அபாயம் 12 குடும்பங்களை வெளியேர உத்தரவு ..பிரதேசவாசிகள் வெளியேர மறுப்பு

(UDHAYAM, COLOMBO) – பாரிய மண்சரிவு காரணமாக ஹட்டன் சமனலகம பிரதேச

த்தில் வசிக்கும் 12 குடும்பங்களை  சேர்ந்தவர்களை வீடுகளிலிருந்து வெளியேரி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஹட்டன் பொலிஸார் அறிவுருத்தல் விடுத்தபோதும் அப்பிரதேச மக்கள் அக்கோரிக்கையை நிராகரித்துள்ளனர்

ஹட்டன் சமனலகம பிரதேசமானது மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய கட்டட அராய்ச்சி நிறுவகம் எதிர்வு கூறியுள்ளது

24 மணி நேரத்திற்குள் அப் பிரதேசத்தில்   125 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யுமாயின் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேருமாறு பி.பதேசவாசிகளுக்கு அறிவுருத்தல் விடுக்கப்பட்டுள்ளது

இதே வேளை அப்பிரதேசத்தில் மழைமானியொன்றும் வைக்கப்பட்டுள்ளது கடந்த இரண்டு நாட்களாக அப்பிரதேசத்தில் 110 மில்லிமீற்றர் மழை பெய்கின்றது ஆகவே வீடுகளிலிருந்து வெளியேறி ஹட்டன் டன்பார் மைதானத்துக்கோ அல்லது ஹட்டன் ரயில் நிலையத்தில் தற்பொழுது மூடப்பட்டிருக்கும் சேவையாளர் உத்தியோகஸ்தர் இல்லங்களுக்கோ சென்று தங்குமாறு பொலிஸா அறிவுறுத்தியுள்ளனர் எனினும் இந்த பிரச்சினை ஏறக்குறைய 5 வருடங்களாக இருக்கின்றது அதற்கு ஒரு தீர்வு காண்பதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஹட்டன் பிரதேசத்தில் மூடப்பட்டிருகின்ற வசதிகளுடன் கூடிய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை அல்லது நிலையான தீர்வை பெற்றுத்தரும் வரையில் வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுகொள்வதற்கான வாடகை பணத்தை பெற்றுத்தறுமாறும் பிரதேச வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

Karunaratne won’t give up on Sri Lanka’s World Cup hopes

තැපැල් වර්ජනය තවදුරටත්

ஆங் சான் சூகி இராஜினாமா செய்ய வேண்டும்