கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் என்பது கொழும்பு நகரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதே தவிர, சபையைத் தீர்மானிப்பதல்லவென கொழும்பு மாநகர முதல்வர் விராய் கேலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தோற்கடித்தது தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டத்தையல்ல.
மாறாக அவர்களது மனச்சாட்சியையும், மனச்சாட்சியின் வரவு செலவுத் திட்டத்தையுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையின் ஆளும் தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் எதிர்க்கட்சிகளின் கூட்டு எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாநகர சபையின் கட்டுப்பாட்டை பொறுப்பேற்றது முதல் தேசிய மக்கள் சக்தி நிர்வாகமானது கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களுடனும் சுமுகமாகவே பணியாற்றி வந்துள்ளதாக தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் தோற்கடித்தது தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டத்தையல்ல.
மாறாக அவர்களது மனச்சாட்சியையும், மனச்சாட்சியின் வரவு செலவுத் திட்டத்தையுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
