ராஜபக்ஷர்களை திருடர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் ஊழல்வாதிகளையும், பாதாளக் குழுக்களையும் அரசாங்கமே பாதுகாக்கிறது.
எம்மை விமர்சித்துக் கொண்டிருப்பதால் எவ்வித பயனும் கிடைக்காது என்பதை அரசாங்கம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாத்தாண்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.
அனர்த்தங்களால் மத தலங்கள் சேதமடைந்துள்ளன.அவற்றை புனரமைப்பதற்கு அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் மத தலங்களுக்கு தேவையான வசதிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.
அரசாங்கம் எம்மை விமர்சித்துக் கொண்டு கஞ்சா வளர்க்கிறது. குற்றவாளிகளுக்கும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கம் குறிப்பிட்டது.
ஆனால் தற்போது அரசாங்கத்துக்குள் தான் சகல குற்றவாளிகளும், மோசடியாளர்களும் உள்ளார்கள்.
ராஜபக்ஷர்களை திருடர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் ஊழல்வாதிகளையும், பாதாளக் குழுக்களையும் அரசாங்கமே பாதுகாக்கிறது.
அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்கள், பேசுபவர்கள் அரச அதிகாரத்தால் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
எம்மை விமர்சித்துக் கொண்டிருப்பதால் எவ்வித பயனும் கிடைக்காது என்பதை அரசாங்கம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன என்றார்.
-இராஜதுரை ஹஷான்
