அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களை, இன்றைய தினம் (2025 டிசம்பர் 23ஆம் திகதி) அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினேன்.

​இலங்கை முகங்கொடுத்த இயற்கை அனர்த்தத்தின் பின்னரான மீள்நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைத்தல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

வீடியோ

Related posts

IMF யின் நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை – உதய கம்மன்பில.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல் இன்று

யாழ்.பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை – இராணுவ வீரர் கைது [VIDEO]