அரசியல்உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபையின் பஜ்ஜெட் நிறைவேற்றம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் எம்.எம்.எம். ஹலால்தீன் செவ்வாய்க்கிழமை (23) உத்தியோகபூர்வமாக 2026 ஆம் ஆண்டுக்கின (பஜ்ஜெட்) வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தார்.

இதன்போது, பஜ்ஜெட் தொடர்பான ஆலோசனைகள், விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் சபை அமர்வில் இடம்பெற்றன.

19 பேர் கொண்ட சபை உறுப்பினர்களில் குறித்த அமர்வுக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் சமூகமளிக்காத நிலையில், 18 பேர் சமூகமளித்திருந்தனர்.

பஜ்ஜெட் தொடர்பான வாக்கெடுப்பில் 11 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்ட நிலையில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, சுயேச்சைக் குழு ஆகிய கட்சிகளின் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

இவ் வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

-ஓட்டமாவடி நிருபர் எச். எம். எம். பர்ஸான்

Related posts

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் பலி

editor

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

மாளிகாவத்தையில் நிவாரணம் வழங்கிய இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு