வகைப்படுத்தப்படாத

ஹர்ஷ டி சில்வா இன்று முறி மோசடி விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அழைக்கப்பட்டுள்ளளார்.

இதற்கமைய அவர் இன்று காலை பத்து மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

இதற்கு முன்னதாக ஹர்ஷ டி சில்வா கடந்த 25 ஆம் திகதி வாக்கு மூலம் பெற்றுக்கொடுப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஆணைக் குழு கூடுகின்ற நிலையில், பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தவிர மத்திய வங்கியின் மேலதிக பணிப்பாளர் வசந்த அல்விஸ்ஸூம் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

Related posts

கிருலபனை காவற்துறையின் துணை ஆய்வாளர் கைது

விபத்துக்குள்ளான விமானம்-காரணம் வெளியானது

சிறப்புப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலயம் திறப்பு