உள்நாடு

ஐந்து மீனவர்களுடன் பல நாள் மீன்பிடிப் படகொன்று மாயம்!

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

‘இதுரங்கி 1’ எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

அந்த படகில் 5 மீனவர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகு கடந்த நவம்பர் 21 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அந்த படகிலிருந்த ஐந்து மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 6 ஆம் திகதி இறுதியாக அவர்களிடமிருந்து அழைப்பு ஒன்று வந்ததாகவும், அன்று முதல் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

Related posts

குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் வனாத்தவில்லு பாடசாலைக்கும் தொடர்புண்டு

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு