வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு தொடர்பில் கிழக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினரான சட்டத்தரணி றாஸி ஜாபிருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய,
அக்கரைப்பற்று மாநகர முதல்வரால் முன்வைக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட சமர்பிப்பானது சட்ட ஒழுங்குகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகின்றது.
குறித்த கடிதத்தில் மாநகரசபை உறுப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
